சினிமா செய்திகள்
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரே மேன்’ என்ற படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் ரிலீசாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் 2 நிமிடங்கள் வரை இருக்கும் நிலையில் இதில் மிகச் சில நொடிகளில் மட்டுமே தனுஷ் வருவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
‘தி க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பிற்காக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தனுஷ் அமெரிக்காவில் இருந்தார். இதனால் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் தனுஷ் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
‘தி க்ரே மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தனுஷின் புகைப்படம் இல்லாமலிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த ட்ரெய்லரில் 5 அல்லது 10 விநாடிகள் மட்டுமே தனுஷின் காட்சிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி டைட்டிலில் தனுஷின் பெயர் கடைசியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்த படத்தில் உண்மையிலேயே தனுஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாரா? அல்லது சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாரா? என்ற சந்தேகத்தை அவரது ரசிகர்களை எழுப்பி வருகின்றனர்.
LOOK AT YOUR SCREENS. ALL THE STARS ARE OUT TONIGHT 💥💥💥#TheGrayMan ft. all our favourites arrives 22nd July. pic.twitter.com/8xXh6E2PLe
— Netflix India (@NetflixIndia) May 24, 2022