தமிழ்நாடு
‘உங்களுக்கும் பசிக்கும்… எங்களுக்கும் பசிக்குமில்ல…’- முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் நடந்த ருசிகர சம்பவம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று கரூர் சென்றார். அங்கு அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 118.53 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 28 முடிவுற்றத் திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும் 627 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2,089 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தப் பின்னர் சிறப்புரை ஆற்றினார். அப்போது பல்வேறு முடிவுற்றப் பணிகள் குறித்து முதல்வர் பட்டியல் போட்டு விளக்கி வந்தார். ஒரு கட்டத்தில் முதல்வர் பழனிசாமி, தனது உரையை முடிக்கும் போது, ‘வேறு எதாவது முடிவுற்றத் திட்டங்கள் இருக்கின்றனவா?’ எனக் கேள்வி எழுப்பினார் ஒரு பத்திரிகையாளர்.
அதற்கு முதல்வர், ‘முடிவுற்றத் திட்டங்களின் பட்டியல் அதிகமா இருக்குதுங்க. ஆனா மதியம் சாப்புட்ற நேரமாச்சுங்க. பசி நேரங்க. உங்களுக்கும் பசியா இருக்கும். எங்களுக்கும் பசியா இருக்குது. நிறைய இருக்குது. அதுல குறிப்பிடத மட்டும் நான் சொல்ல விரும்புறேங்க’ என சிரித்துக் கொண்டே பேசினார்.


















