Connect with us

உலகம்

கைது செய்ய வாரண்ட் பிறப்பித்த நீதிபதி.. முன்னாள் பிரதமர் தலைமறைவு..!

Published

on

முன்னாள் பிரதமரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான் என்பதும் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதன் தெரிந்ததே. பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்த இம்ரான்கான் 1996 ஆம் ஆண்டு தனிக்கட்சியை தொடங்கி அரசியலில் குதித்தார் என்பதும் 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி ஆட்சியைப் பிடித்ததை அடுத்து அவர் பிரதமர் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் விலைவாசி கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து இம்ரான் கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த கூட்டணி கட்சிகள் திடீரென வாபஸ் பெற்றன. இதனை அடுத்து கடந்த ஆண்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் பல்வேறு நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்த போது அவருக்கு உலக தலைவர்கள் பரிசு பொருட்களை வழங்கியதாகவும் பாகிஸ்தான் சட்ட விதிகளின்படி பிரதமருக்கு அளிக்கப்படும் பரிசு பொருள்கள் அரசு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் தனக்கு வந்த பரிசுப் பொருட்களை இம்ரான்கான் விற்று விட்டதாகவும் அதன் மூலம் அவர் கோடிக்கணக்கான பணத்தை லாபமாக பெற்றதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் அவரை ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர் மூன்று முறை ஆஜராகவில்லை என்பதை அடுத்து அவரை கைது செய்து ஜாமினில் வெளிவர முடியாத வாரன்டை நீதிமன்றம் பிறப்பித்தது.

இதனை அடுத்து உடனடியாக இஸ்லாமாபாத் போலீசார் இம்ரான் கான் வீட்டிற்கு சென்றபோது அவர் அங்கு இல்லை என்றும் அவர் திடீரென தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இம்ரான் கானை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறிய போது இம்ரான் கான் தலைமறைவாக உள்ளார் என்றும் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை கைது செய்ய விடாமல் கட்சித் தொண்டர்கள் தடுக்கின்றனர் என்றும் ஆனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறினார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?