உலகம்
சிறுவனுக்கு உதட்டில் முத்தம்: சர்ச்சையில் சிக்கிய புத்த மத தலைவர் தலாய் லாமா!

திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா சிறுவன் ஒருவனுக்கு உதட்டில் முத்தமிட்டு பின்னர் தனது நாக்கை நீட்டி நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
வைரலாக பரவி வரும் இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இல்லை. அதில், மேடையில் அமர்ந்து இருக்கும் தலாய் லாமாவிற்கு மரியாதை செலுத்த சிறுவன் ஒருவன் அருகே வருகிறான். அந்த சிறுவனை பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்கிறார் ஆன்மீக தலைவர் தலாய் லாமா. இதனை தொடர்ந்து சில விநாடிகளுக்கு பின்னர் தனது நாக்கை வெளியே நீட்டி அதனை முத்தமிடுமாறு தலாய் லாமா சிறுவனிடம் வலியுறுத்துகிறார். இதற்கு மறுக்கும் சிறுவன், தலாய் லாமா தனது கையை பிடித்து இருந்ததால் வேறு வழியில்லாமல் அவரின் நாக்கில் முத்தமிட்டுவிட்டு சென்றுவிட்டான்.
தலாய் லாமாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது தலாய் லாமாவின் அத்துமீறல் என ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், மற்றொரு தரப்பினர் தலாய் லாமா விளையாட்டாகவே சிறுவனுக்கு முத்தமிட்டார் என அவருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறிவருகின்றனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு, தனக்குப் பின் தலாய் லாமாவாக ஒரு பெண் வந்தால் அவர் மிக அழகாக இருக்க வேண்டும் என அவர் பேசியது சர்ச்சை ஆனது. பின்னர் தனது பேச்சுக்கு தலாய் லாமா மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.