உலகம்
உள்ளாடை விளம்பரங்களில் பெண்கள் நடிக்க கூடாது. அரசின் திடீர் கட்டுப்பாட்டால் பரபரப்பு..!

உள்ளாடை விளம்பரங்களில் மாடல்களாக பெண்கள் நடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளதால் சீனாவில் உள்ள பெண் மாடல்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவில் அந்நாட்டு அதிபரின் உத்தரவு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக பொது இடங்களில் போராட்டம் நடத்த, அரசுக்கு எதிராக கருத்துக்கள் கூற, சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் தெரிவிக்க ஆகிய கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடாக உள்ளாடை விளம்பரங்களில் பெண்கள் நடிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ளாடை விளம்பரங்களில் பெண்களுக்கு பதிலாக ஆண்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து உள்ளாடை நிறுவனம் ஒன்று செய்தியாளர்களிடம் பேசியபோது ’பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிப்பதற்கு சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் நாங்கள் ஆண் மாடல்களையே பெண்களின் உள்ளாடைகளுடைக்கும் விளம்பரம் செய்து வருகிறோம். வேறு வழியில்லாததால் நாங்கள் இந்த விளம்பரத்தை செய்து வருகிறோம் என்பதும் காலப்போக்கில் இது மாறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சீனாவில் லைவ் ஸ்ட்ரீமிங் காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. லைவ் ஸ்ட்ரீமிங் காட்சிகள் மூலம் ஏராளமான வர்த்தகங்களில் சீனாவில் நடந்து வந்த நிலையில் சீனாவின் வர்த்தகம் பெருமளவு இந்த தடையால் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆண்கள், பெண்களின் உள்ளாடைகளுக்கு மாடல்களாக நடித்து வருவதால் பல நிறுவனங்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில் லைப் ஸ்ட்ரீமிங் செய்யக்கூடாது என்ற தடை அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு பதிலாக ஆண்கள் நடிக்கும் விளம்பரங்கள் டிக் டாக்கில் ட்ரெண்டாகி வந்தாலும் பெண்கள் இந்த விளம்பரங்களை ரசிக்கவில்லை என்றும் பெண்களின் உள்ளாடைகளுக்கு பெண்கள் நடித்தால் மட்டுமே அந்த விளம்பரம் சரியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து சீன அரசு விளக்கம் அளித்த போது பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் போது ஆபாசத்தின் எல்லைக்கு செல்வதாகவும் இதை தடுக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இது குறித்து பெண்கள் நல அமைப்புகள் கூறிய போது இந்த உத்தர்வு மாடல் தொழில் செய்யும் பெண்களின் வேலையை பறிக்கும் உத்தரவு என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சீனாவை பொருத்தவரை போராட்டம் நடத்தக்கூடாது என்பதால் பெண்கள் நல அமைப்புகள் கண்டன குரல் மட்டுமே எழுப்பு வருகின்றனர் என்பதும் எந்தவித போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட சீனாவிலும் அதேபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.