Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாமினேட் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த செய்தி தற்போது கசிந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் பாவனி, இமான் அண்ணாச்சி, அபிநவ், சிபி, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி மற்றும் அக்ஷரா ஆகியோர்கள் என்பது தெரிந்ததே.

இந்த ஒன்பது பேர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்களின் அடிப்படையில் இன்று இசைவாணி வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களின் டுவிட் செய்த தகவலின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே இசைவாணியின் போக்கு சரியில்லை என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவர் தாமரைச்செல்வியிடம் தேவையில்லாமல் மோதுகிறார் என்பதும் மரியாதை இல்லாமல் பேசுவதாகவும் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

மேலும் இசைவாணி கேப்டனாக இருந்த நேரத்தில் அவரது செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாகவும் பார்வையாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். அதனால்தான் இசைவாணிக்கு இந்த வாரம் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் இசைவாணி இன்று வெளியேறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வழக்கமாக கடைசி நேரத்தில் தப்பிக்கும் அபினவ் நேற்றே தப்பித்து விட்டார் என்பதும் ஏற்கனவே பாவனி மற்றும் நிரூப் ஆகியோர்களும் நேற்று சேவ் செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?