உலகம்
தந்தை பணிநீக்கம் செய்யப்படுவாரோ? பயத்தில் பள்ளி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!

தந்தை பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவருடைய மகள் எடுத்த அதிர்ச்சியான முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் தற்போது பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் வேலை நீக்க வேலை இழந்தவர்களுக்கு இரண்டு விதமான சிக்கல்கள் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலாவதாக சம்பளம் வராது என்பதால் அடுத்த மாத செலவை எப்படி சமாளிக்க முடியும் என்ற கவலைம். அதுமட்டும் இன்றி இரண்டாவதாக H1-B விசாவில் வந்தவர்கள் 60 நாட்களுக்கு மீண்டும் ஒரு புதிய வேலையை கண்டுபிடிக்க வேண்டும், இல்லை எனில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற சிக்கல் உள்ளது.

#image_title
இதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஊழியர்கள் H1-B விசாவை காப்பாற்றிக் கொள்வதற்காக வேறு வேலையை தேடி வருகின்றனர். அவ்வாறு வேலை கிடைக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் பணிபுரியும் பவன் ராய் என்பவர் வேலைநீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகள் தன்வி, தனது தந்தை வேலை நீக்கம் செய்யப்பட்டால் தான் நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக திடீரென தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
பள்ளியில் படித்து வரும் அவர் தலைமறைவாகிய 25 நாட்கள் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவரைத் தேடும் பணியில் அமெரிக்க போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தன்வியின் தாயார் வேலைநீக்கம் செய்யப்பட்டதால் அவர் இந்தியா திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தற்போது தந்தையும் வேலை நீக்கம் செய்யப்படுவாரோ என்ற பயத்தில் அவர் காணாமல் போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.




















