Connect with us

தமிழ்நாடு

1996 வெற்றிக்கு ரஜினி காரணம் அல்ல, நான் தான் காரணம்: சரத்குமார்

Published

on

கடந்த 1996ஆம் ஆண்டு திமுக-தமாக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்ததால்தான் அந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதாக இதுநாள் வரை அனைத்து மக்களும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் கடந்த 1996ஆம் ஆண்டு திமுக-தமாக பெற்ற வெற்றிக்கு நான்தான் காரணம் என சரத்குமார் தேர்தல் பிரசார மேடையில் கூறினார். 96 ஆம் ஆண்டு திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வதற்காக 40 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து செய்தேன். அதனால் தான் அந்த கூட்டணி வெற்றி பெற்றது.

அதே போல் தற்போதும் எங்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன். நாங்கள் பல திட்டங்களை வைத்துள்ளோம். இப்பொழுது பொருளாதாரம் உயரவில்லை, அதனால் மக்களின் வாழ்வாதாரமும் உயரவில்லை, அதை உயர்த்துவோம்.

மக்களுக்கு பணம் கொடுத்தால் போதும் வாக்களித்து விடுவார்கள் என்று எண்ணுகிறார்கள். காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன், வாக்குக்கு கொடுக்கும் பணத்தை தூக்கி எறியுங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியும் துணிவும் வேறு எதிலும் கிடைக்காது’ என்று சரத்குமார் கூறினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
More features free, and the pages actually rank on google..