இந்தியா
ஹிஜாப் அணிந்த மாணவியை அழைத்து செல்லும் இந்து மாணவிகள்: ராகுல் காந்தி கமெண்ட்!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் உள்பட எந்த விதமான மத அடையாளத்துடன் பள்ளிகள் கல்லூரிகளுக்கு மாணவிகள் வரக்கூடாது என கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை மாணவிகள் மத அடையாளத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது
ஆனால் கர்நாடக அரசு மற்றும் நீதிமன்றத்தின் அறிவுரையை மீறி பல மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர் என்பதும் அதனால் அவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படாமல் இருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவி ஒருவரை இந்து மாணவிகள் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இந்த புகைப்படத்திற்கு ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ’எங்கள் பாரதம் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.


















