இந்தியா
வெளியானது யூஜிசி நெட் தேர்வு முடிவுகள்: எப்படி பார்ப்பது?

யூஜிசி நெட் தேர்வுகள் முடிவு இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் நெட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து விண்ணப்பதாரர்கள் மிகவும் ஆர்வத்துடன் அந்த முடிவுகளை பார்த்து வருகின்றனர்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நெட் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 239 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் நிலையில் சற்று முன்னரே யுஜிசி தேசியத் தகுதித் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை https://testservices.nic.in/resultservices/UGCNet-auth-2021 என்ற இணையதளத்தில் சென்று தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்து பார்க்கலாம். விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு எண்கள் ஆகியவற்றை பதிவு செய்தால் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.







