இந்தியா
தகுதி நீக்கத்திற்கு பின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு செல்லும் ராகுல் காந்தி!

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு பின்னர் தற்போது முதன்முறையாக வயநாடு செல்ல உள்ளார்.

#image_title
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், அதன் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்து காலி செய்ய சொன்னது என அனைத்தும் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்கள் என பலரும் போராட்டங்கள் என எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் எம்பியாக இருந்த வயநாடு தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் ராகுல் காந்தி.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு ராகுல் காந்தி நாளை பயணம் செய்ய உள்ளார். அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திலும், பேரணியிலும் கலந்துகொள்ள உள்ளார். ராகுல் காந்தியின் இந்த பயணம் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.