இந்தியா
விவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்!

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம்.
1) 10 லட்சம் வேலைவாய்ப்புகள் நகரம் மற்றும் கிராம்ப் பகுதிகளில் உருவாக்கப்படும்.
2) வேலை இல்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1500 நிதி உதவி.
3) விவசாய மசோதா ரத்து செய்யப்பட்டு புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்.
4) முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கு மாதம் ரூ.800 பென்ஷன்.
5) 80 வயதுக்கு அதிகமான முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 பென்ஷன்.
6) விவசாயக் கடன் மற்றும் மின்சார கட்டணம் தள்ளுபடி.
7) பஞ்சாப் போன்று விவசாயம் செய்வதற்கும், வருவாய் அதிகரிக்கவும் கூடுதல் வசதிகள் செய்துதரப்படும்.




















