தமிழ்நாடு
தமிழகத்தில் பரவும் H3N2 காய்ச்சல்: 3 நாட்கள் வீட்டிலேயே இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் பலருக்கும் திடீரென H3N2 வகை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று இல்லாமல் எல்லோருக்கும் பரவலாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

#image_title
H3N2 என்னும் இந்த ஃப்ளூ காய்ச்சல் கடந்த 2-3 மாதங்களாக இது பரவி வருகிறது.
இது வைரஸ் என்பதால் ஆண்டிபயாடிக் இதற்கு எதிராக வேலை செய்யாது. அதே நேரம் இது கொரோனாவும் கிடையாது. இந்நிலையில் இந்த காய்ச்சல் தமிழகத்தில் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், H3N2 காய்ச்சல் வந்தால் 3 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் போதுமானது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார் அவர்.