தமிழ்நாடு
நிவாரண பணிகள் முழுதாக முடியவில்லை.. முதல்வரின் நாகை பயணம் திடீர் ரத்து!

கஜா புயலால் நாகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை பார்வையிட திட்டமிட்டு இருந்த முதல்வர் பழனிச்சாமியின் பயண திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கஜா புயலால் நாகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை பார்வையிட திட்டமிட்டு இருந்த முதல்வர் பழனிச்சாமியின் பயண திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகையில் பாதிக்கப்பட்டு இருந்த பகுதிகளை முதல்வர் பழனிச்சாமி பார்வையிட திட்டமிட்டு இருந்தார். இன்று காலை அவர் சென்னையில் இருந்து நாகை புறப்படுவதாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் முதல்வர் பழனிச்சாமியின் நாகை பயணம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாட்கள் கழித்து முதல்வர் நாகை செல்வதாக தகவல் வருகிறது.
நிவாரண பணிகள் முடியாத காரணத்தால் அவரின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிவாரண பணிகளை வேகமாக முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.















