வீடியோ
ஹாப்ஸ் அண்ட் ஷா டிரைலர் ரிலீஸ்!

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படம் என்றாலே உலக ரசிகர்கள் பைத்தியம் பிடித்தது போல் அதன் மேல் காதல் கொள்ள துவங்கி விடுவார்கள். பால் வாக்கர் இறந்த பிறகு படத்தின் நாயகன் வின் டீஸல் மிகவும் மனமுடைந்து போனார்.
இந்நிலையில், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸின் கிளை கதையான ஹாப்ஸ் மற்றும் ஷாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஹாப்ஸ் அண்ட் ஷா படம் உருவாகியுள்ளது. இதனை ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படக்குழுவே தயாரித்துள்ளது.
WWE சாம்பியன் ராக் என்று அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் மற்றும் ஜேஸன் ஸ்டாதம் ஆகியோரின் கதை தான் இந்த ஹாப்ஸ் அண்ட் ஷா.
இந்த படத்தில் இவர்கள் இருவருக்கும் எமகாதக வில்லனாக சூப்பர் பவர் ஏற்றப்பட்ட மனித அரக்கனாக மற்றொரு ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 2ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் திரைக்கு வருகிறது.

















