வீடியோ
இந்திய அரசியல்வாதிகளை கலாய்க்கும் எல்.கே.ஜி. டிரைலர் ரிலீஸ்!
ஆளுங்கட்சி முதல் மோடி வரை இந்திய அரசியல்வாதிகள் செய்யும் அபார சேட்டைகளை அசத்தலாக கலாய்த்து வெளிவந்துள்ளது எல்.கே.ஜி டிரைலர்.
அறிமுக இயக்குநர் கே. ஆர். பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக அறிமுகமாகும் அரசியல் சட்டையர் படமாக எல்.கே.ஜி. உருவாகி வருகிறது. பொங்கலுக்கு ரிலீசாகும் என்று சொன்ன நிலையில், இன்று இப்படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது.
இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும், ஜே.கே. ரித்திஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

எல்.கே.ஜி. டிரைலர்
3000 கோடி சிலை முதல் மோடியின் யோகா சேலஞ்ச் வரை என பல நிகழ்கால அரசியல் விஷயங்களை கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் பண்ணாமல் அப்படியே வைத்து கலாய்த்துள்ளனர்.











