உலகம்
மிகப்பெரிய ஹேக்.. 220 கோடி பேர் லாக்-அவுட் செய்ய சொல்லும் பேஸ்புக்!

நியூயார்க்: பேஸ்புக் 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்ய சொல்லி உள்ளது.
பேஸ்புக்கில் செய்யப்பட்ட ஹேக் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹேக்கர்கள் 9 கோடி பேரின் பேஸ்புக் விவரங்களை திருடி இருக்கிறார்கள்.

ஆனால் இது எந்த நாடு என்று விவரம் வெளியாகவில்லை. என்ன மாதிரியான தகவல்கள் திருடப்பட்டது என்றும் கூறப்படவில்லை.இதை தற்போது பேஸ்புக் சரி செய்துள்ளது.
ஆனாலும் பாஸ்வேர்டை இதனால் மாற்ற வேண்டும். இதற்காக பேஸ்புக்கை ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு லாக் இன் செய்ய வேண்டும். 220 கோடி பேரிடம் பேஸ்புக்கை லாக் அவுட் செய்துவிட்டு லாக் இன் செய்யும்படி பேஸ்புக் கோரிக்கை வைத்து இருக்கிறது.



















