இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.03.2026

- இந்திய வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் மக்களவையில் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்த அவை குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதித்துவம் அல்ல. மாறாக மொத்த நாட்டின் பிரதிநிதி.
- அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால் எரிபொருள் மற்றும் மின்சாரம் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக மீண்டும் பல நாடுகள் “ work from home’ முறைக்கு மாற ஆரம்பித்துள்ளன. பொதுமக்கள் தனிப்பட்ட வாகனங்களை விடுத்து பொதுப்போக்குவரத்துக்கு மாற வேண்டுகோள். லிப்ட் டுக்குப் பதில் படிக்கட்டுகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தல்.
- ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற தாய்லாந்தின் 3 சரக்கு கப்பல்களை தாக்கியது ஈரான்.
- பஹ்ரெய்னின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத் பாப்கோ மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணெய் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதாக பரபரப்பு அறிவிப்பு.
- கோவிட் தடுப்பூசிகளால் உயிரிழப்பு பக்கவிளைவுகள் ஏற்பட்டது உண்மையே. உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல். தடுப்பூசி பக்கவிளைவுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு திட்டம் உருவாக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
- திருப்பதி திருமலை கோயிலில் SSD டோக்கன் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் ஓதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ எந்த காரணத்தைக் கொண்டும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இந்த நடைமுறை வரும் 16 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. – தேவஸ்தானம் தெரிவிப்பு.
- உலக புகழ் பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் மே 1 ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
- முஸ்லீம் பெண்களுக்கு எதிரான ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு.- உச்ச நீதிமன்றம்.














