இந்தியா
பாதையை அடைச்சா தாண்டி போவோம்!.. வைரலாகும் யானை வீடியோ…

விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது.
யானைகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் செல்லும் பாதைகளை மனிதர்கள் ஆக்கிரமித்து யானைகளுக்கான வாழ்விடங்களை பறித்து வருகின்றனர். இதனால், வேறு வழியின்றி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் யானைகள் நுழைந்து வருகிறது.
அப்படி யானைகள் வரும்போது அவற்றை தாக்குவதும், பட்டாசு வைத்து பயமுறுத்தி துரத்துவதுமாக மனிதர்கள் மிகவும் கொடூரமாக நடந்து வருகின்றனர்.
இந்நிலையில், யானை செல்லும் பாதையில் வைத்திருக்கும் தடுப்பை ஒரு யானை மனிதர்கள் போல் தாண்டி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Speechless 😶 #elephants pic.twitter.com/6S1WJqEkZS
— Supriya Sahu IAS (@supriyasahuias) November 17, 2021