தமிழ்நாடு
கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்துங்கள்: ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆக்கிரமிப்பு அகற்றம் விஷயத்தில் கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்துங்கள் என்றும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென முதியவர் ஒருவர் தீக்குளித்து இறந்ததால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது .
இந்த நிலையில் ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணியை நிறுத்தக் கோரி புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை தமிழக அரசுக்கு கூறியுள்ளது.
தமிழக அரசுக்கு தேவையான நேரம் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் எங்கள் உத்தரவு நீர்த்துப் போக விரும்பவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு பணிகளை நிறுத்த நாங்கள் உத்தரவிட போவதில்லை என்றும் தேவையான போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும், முதலில் மாற்று இடத்திற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கண்ணாமூச்சி ஆட்டத்தை உடனே நிறுத்துங்கள் என்று ஆக்கிரமிப்பில் எங்களுக்கும் இன்னும் செயல்படாமல் இருப்பது வருந்தத்தக்கது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.