தமிழ்நாடு
வைகோ மகனுக்கு பொதுசெயலாளர் பதவி: ரகசிய வாக்கெடுப்பில் அபார வெற்றி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அவர்கள் மதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அவர்கள் தீவிர அரசியலில் இறங்கப் போவதாகவும் அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் வாரிசு அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த வைகோ அவர்கள் தனது வாரிசையே அரசியலுக்கு இழுக்க பார்க்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்ய மறைமுக வாக்கெடுப்பு இன்று சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. மொத்தம் 106 நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு ரகசிய வாக்களித்த நிலையில் 104 பேர்கள் துரை வையாபுரிக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், 2 பேர்கள் மட்டுமே எதிர்த்து வாக்களித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனை அடுத்து மதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக துரை வையாபுரி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


















