Connect with us

இந்தியா

திப்பு சுல்தான் பெயரை பயன்படுத்த கூடாது.. காங்கிரஸ், பாஜகவுக்கு வாரிசுகள் எச்சரிக்கை..!

Published

on

அரசியல ஆதாயத்திற்காக திப்புசுல்தானின் பெயரை பயன்படுத்தக்கூடாது என திப்பு சுல்தானின் வாரிசு, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் திப்புசுல்தான் பெயரை இழுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் திப்பு சுல்தானுக்கு ஆதரவாகவும் பாஜகவினர் திப்பு சுல்தானுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருவதை அடுத்து வாரிசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திப்பு சுல்தானில் ஏழாவது தலைமுறை வம்சாவளியைச் சேர்ந்த சஹாப்ஜாதா மன்சூர் அலி என்பவர் திப்பு சுல்தானின் பெயரை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்றும் மீறி பயன்படுத்தினால் அவதூறு வழக்கு தொடர்வோம் என்று இது குறித்து தடை உத்தரவு போடவும் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாஜகவாக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி திப்புசுல்தானின் குடும்பத்தினருக்கு எதுவும் செய்யவில்லை என்றும் திப்பு சுல்தான் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசுவது வாரிசுதாரர்களின் உணர்வை புண்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

திப்பு சுல்தான் வம்சாவளியினார் மற்றும் குடும்பத்தினர் என்பதால் மைசூரை சேர்ந்த வழக்கறிஞர் குழுவிடம் பேசியுள்ளோம் என்றும் அரசியல் ஆதாயத்திற்காக திப்பு சுல்தார் பெயரை பயன்படுத்தக்கூடாது என்பது இதுகுறித்து அவதூறு வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திப்பு சுல்தான் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர் என்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் திப்பு சுல்தான் குடும்பத்தினர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் வாக்குகளுக்காக மட்டுமே அவரது பெயரை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடக சட்டசபை தேர்தலின் பிரச்சாரத்தின் போது திப்புசுல்தான் மற்றும் சாவர்க்கார் என ஒப்பிட்டு கர்நாடக மாநில பாஜக தலைவர் நவீன் குமார் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கர்நாடக மாநில சட்டசபை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே நடக்காது என்றும் மாறாக சாவர்க்கர் மற்றும் திப்பு சுல்தானின் சித்தாந்தத்திற்கு இடையே நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திப்பு சுல்தானின் வழி தோன்றர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் ராமர் மற்றும் அனுமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாஜக என பேசி வரும்போது காங்கிரஸ் கட்சியினரும் திப்பு சுல்தானுக்கு அவதூறு அளிக்கும் வகையில் தான் பேசி வருகின்றனர் என்றும் எனவே இரு கட்சியினரும் திப்பு சுல்தான் குறித்து பேசக்கூடாது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூர் மற்றும் மைசூர் இடையே இயங்கி வரும் ரயில் திப்புசுல்தான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில் சமீபத்தில் உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்றப்பட்டது. இது திப்பு சுல்தான் வாரிசுதாரர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?