இந்தியா
6வது ஊதிய குழுவில் லட்சக்கணக்கில் பலன்கள்: ஓய்வு பெற்ற மூதாட்டியை ஏமாற்றி ரூ.10 லட்சம் மோசடி..!

6வது ஊதிய குழுவில் ஓய்வு பெற்றவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பலன்களை கிடைப்பதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆன மூதாட்டி ஒருவரிடம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் ஓய்வு பெற்ற பின் தனது ஓய்வூதிய பணத்தை வைத்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு பிப்ரவரி 16ஆம் தேதி தெரியாத மொபைல் எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய பெண் புதுடெல்லியில் உள்ள கிராஜுவெட்டி மற்றும் பிராவிடண்ட் பண்ட் அலுவலகத்தின் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
மேலும் இந்த அலுவலகம் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்கிறது என்றும் அவரது வங்கி கணக்கில் ரூபாய் 4.86 லட்சம் ரூபாய் கிரெடிட் பெற உரிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த பெண் மூதாட்டியிடம் இனிய முறையில் பேசி சில விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய செய்தார். அதன் பிறகு அவர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு சில தொகைகள் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முதலில் சந்தேகப்பட்டாலும் அதன் பின் அந்த பெண் தனது முதலாளியுடன் பேச வைக்கிறேன் என்று கூறியுள்ளார். 6வது ஊதிய குழு மூலம் அவருக்கு லட்ச கணக்கில் வருமானம் கிடைக்கும் என்றும் அதற்காக நான்கு படிவங்களை மட்டும் பூர்த்தி செய்து ஒரு சில கட்டணங்களை செலுத்தினால் போதும் என்றும் அவரது முதலாளி என்று கூறப்பட்டவர் இனிமையாக பேசியுள்ளார்.
இதனை அடுத்து பிப்ரவரி 16 முதல் 22 வரை அந்த மூதாட்டி சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து தான் அந்த மூதாட்டிக்கு திடீரென சந்தேகம் எழுந்ததை அடுத்து காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 34 (பொது நோக்கத்திற்காக பலர் செய்த செயல்கள்), 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்தை வழங்குதல்), பிரிவுகள் 66C (அடையாளத் திருட்டு) மற்றும் 66D ((ஏமாற்றுதல்) ஆகிய பிரிவாரின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் நிறுவனத்தின் சட்டம் தொடர்புடைய பிரிவுகளை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.0