சினிமா செய்திகள்
பொங்கலுக்கு பிறகு தீபாவளி ஸ்டார்ட் – விஜய் 63 புதிய அப்டேட்!

தெறி, மெர்சல் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. விஜய்யின் 63வது படத்தை அட்லி இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பொங்கல் முடிந்து வரும் ஜனவரி 20ம் தேதி முதல் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விஜய் இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கான கோச்சாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும், விளையாட்டுத் துறையில் ஏற்படும் அரசியலையும் பேச உள்ளார் என்றும் கதை குறித்த தகவல்களும் சமூக வலைதலங்களில் கசிந்து வருகின்றன.
என்னடா இது கனா படத்தை பார்த்து அட்லி காப்பி அடித்து விட்டாரா என்ற மீம்களும் கிளம்ப துவங்கியுள்ளன. ஆனால், இந்த படம் முற்றிலும் புதிய உணர்வை தரும் என்றும் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை 100 சதவீதம் அட்லி பூர்த்தி செய்வார் என்றும் கோலிவுட்டில் இருந்து ஆதரவு பேச்சுகள் அடிபடுகின்றன.
வரும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதால், பொங்கல் முடிந்ததும் எங்களுக்கு தீபாவளி ஆரம்பமாகி விட்டது என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள் இப்போதே உற்சாகமடைந்துள்ளனர்.



















