தமிழ்நாடு
உதயநிதியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர்!

திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. அந்த பட்டியலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகனும், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது
ஏற்கனவே அந்த தொகுதியில் அவரது சார்பில் விருப்ப மனு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் நேர்காணலிலும் உதயநிதி கலந்து கொண்டார். இதனை அடுத்து அவருக்கு சேப்பாக்கம் தொகுதி உறுதி என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர் என்பதும், நேற்றே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உதயநிதி தயாரித்து நடித்த ’கண்ணே கலைமானே’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் உதயநிதி வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: எனது தயாரிப்பாளரும் எனது பட ஹீரோவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு சேப்பாக்கம் தொகுதியில் மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்’ என கூறியிருந்தார்.
Wishing My Producer & Hero, Contestant of Triplicane constituency for Assembly election Thiru.Udhaynithi Stalin a Huge Victory. My hearty wishes dear sir @Udhaystalin
— Seenu Ramasamy (@seenuramasamy) March 12, 2021























