சினிமா
தளபதி 67 கண்டிப்பா எல்சியூ தான்; பூஜை வீடியோவால் அம்பலமான அந்த ரகசியம்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ள தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ தற்போது வெளியானது.
அந்த வீடியோவில் இடம்பெற்ற ஒரு நடிகரால் தளபதி 67 படம் நிச்சயம் எல்சியூ தான் என்பதை ரசிகர்கள் அடித்து சொல்லி வருகின்றனர். மேலும், ஹின்ட் கொடுத்ததற்கு நன்றி என இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

#image_title
கைதி படத்தில் கான்ஸ்டபிளாக நடித்த ஜார்ஜ் மரியன் கதாபாத்திரம் அந்த படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக பார்க்கப்பட்டது. நெப்போலியன் எனும் கான்ஸ்டபிளாக ஜார்ஜ் மரியன் நடித்திருந்த நிலையில், தளபதி 67 படத்தின் பூஜையிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
ஏற்கனவே பகத் ஃபாசில் தளபதி 67 எல்சியூ படம் தான் என சொல்லி இருந்த நிலையில், ஜார்ஜ் மரியம் கதாபாத்திரம் இந்த படத்தில் இணைந்தால் அது கன்ஃபார்ம் எல்சியூ படம் தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

#image_title
நடிகர் விஜய் இந்த படத்தில் கேங்ஸ்டராகவே மாறி ஒட்டுமொத்த டிரக்ஸ் கும்பலையும் அழிக்க போகிறார் என்றும் ஏகப்பட்ட கதைகளை இப்பவே ரசிகர்கள் கெஸ் பண்ண ஆரம்பித்துள்ளனர். பூஜைக்கு நட்புக்காக இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, கார்த்திக் சுப்புராஜ் எல்லாம் வந்ததை போலவே ஜார்ஜ் மரியன் வந்திருக்கலாம் என்றும் ஆனால், கைதி படத்துடன் கனெக்ட் இருப்பதாலே அவர் வந்திருக்கிறார் என ரசிகர்கள் இரு வேறு விதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகர் விஜய்யின் பிகில் படத்துலேயும் ஜார்ஜ் மரியன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தளபதி 67 படம் எல்சியூவா அல்லது ஸ்டாண்ட் அலோன் படமா என்பதையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விரைவில் ஒரு அப்டேட்டாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.