சினிமா செய்திகள்
‘குக் வித் கோமாளி’ தாமுவின் மகளுடன் அஸ்வின்: வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டது என்பதும் அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் குக்’கள், கோமாளிகள் மற்றும் நடுவர்கள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராகிய தாமு தனது மகள் அக்ஷயாவின் புகைப்படத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் லைக்ஸ்கள் கிடைத்த நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அக்ஷயா தாமோதரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஸ்வினுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஒரு மிகச்சிறந்த நல்ல மனிதரை சந்தித்தேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது திருமகள் புகைப்படம் இதுவரை இணையதளங்களில் வெளியானது இல்லை என்ற நிலையில் தற்போது முதன்முதலாக வெளியாகி உள்ளது அடுத்து அந்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.














