சினிமா செய்திகள்
திடீரென கதறி அழும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்: என்ன காரணம்?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஜாலியாக சிரித்து கொண்டே பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் பலமுறை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
முதல் சீசனில் வனிதாவும் இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்ற நிலையில் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த நிகழ்ச்சியின் புரோமோ விடியோ வந்தபோது அதில் ஜாலியான காட்சிகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென செஃப் தாமு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதனை அடுத்து அந்த செட்டில் உள்ள அனைவருமே கதறி அழுகின்றனர்.
கண்ணீர் விடாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு அப்படி என்ன தாமு சொன்னார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தாமு வெளியேற போவதாக, அதனைத்தான் அவர் அறிவித்து இருப்பார் என்று ஒரு சிலரும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி ஏப்ரல் ஒன்று என்பதால் ஏப்ரல் ஃபூலுக்காக பிராங்க் செய்யும் வீடியோவாக இருக்கும் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
இருப்பினும் நாளை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதுதான் உண்மையில் தாமு என்ன சொன்னார்? குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கதறி அழுதது ஏன் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.