சினிமா செய்திகள்
“கர்ணனின் யுத்தம்”- கர்ணன் படத்தின் 4வது பாடல் வெளியானது!!!
Published
2 years agoon
By
Barath
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸாகிறது கர்ணன் திரைப்படம். அந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் பாராட்டுகளையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் மூன்று பாடல்கள் இதற்கு முன்னர் வெளியாகி இருந்தது. அதிலும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘மஞ்சனத்திப் புராணம்’ பாடல்கள் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
இதனால் படம் குறித்தான எதிர்பார்ப்பு விண்ணளவு உயர்ந்துள்ளது. முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் பிரச்சனை குறித்துப் பேசி கவனம் பெற்றது.
இந்நிலையில் கர்ணன் திரைப்படும் அதைப் போன்று சமூகப் பிரச்சனையை பேசும் என்று தெரிகிறது.
இன்று ‘கர்ணனின் யுத்தம்’ என்னும் ‘உட்ராதீங்க எப்போவ்’ என்னும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். ‘தீ’ இந்தப் பாடலை பாடியுள்ளார்.
You may like
-
காலேஜ் படிக்கும் போது 70 சிகரெட்.. இயக்குநர் ஆனதும் 150 சிகரெட்.. வெற்றிமாறன் பேச்சு!
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
டிசம்பர் 4ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. செம அப்டேட் வெளியிட்ட ‘வாரிசு’ படக்குழு
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!
-
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் சிம்பு படம் ரிலீஸா?
-
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்