டிவி
Cook With Comali செட்டில் என்ன நடக்கிறது..?- சிவாங்கி வெளியிட்ட டிரெண்டிங் வீடியோ

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருப்பது ‘குக்கு வித் கோமாளி’. தற்போது அதன் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. வார வாரம் பல்வேறு வித்தியாசமான சமையன் கான்செப்ட், போட்டிகள் மற்றும் டாஸ்குகள் கொடுக்கப்படுவதால் இந்த ஷோவுக்கு ரசிகர்கள் ஏராளம்.
குறிப்பாக இந்த ஷோவில் வரும் குக்குகளைவிட, கோமாளிகளாக வரும் நபர்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் ஒரு கோமாளியாக இருப்பவர் சிவாங்கி. அவருடன் சேர்ந்து அமர்க்களம் செய்ய புகழ், வெட்டுக்கிளி பாலா, மணிமேகலை உள்ளிட்டவர்களும் உடனிருக்கின்றனர். இரண்டாவது சீசனில் போட்டியாளராக இருக்கும் அஸ்வினுடன் ரொமான்ஸ் செய்து வருகிறார் சிவாங்கி. அஸ்வினுடன் அவர் ஷோவில் அடிக்கும் லூட்டிகள் வைரல் ரகம். மொத்தத்தில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியையும் சிவாங்கியையும் பிரிக்க முடியாது என்கிற வகையில் இரண்டு ஒன்றிவிட்டன. இவர் முன்னதாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர், செட் எப்படி இருக்கும் என்பது குறித்து வ்ளாக் வீடியோவை தன் யூடியூபில் வெளியிட்டுள்ளார் சிவாங்கி. அது தற்போது படுவைரலாக மாறி வருகிறது. அதை இங்கே பார்க்கலாம்;