Connect with us

தமிழ்நாடு

தமிழக முதல்வராக பதவியேற்றார் முக ஸ்டாலின்: திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Published

on

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில் முக ஸ்டாலின் அவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஸ்டாலின் அவர்களின் முதல்வர் பதவியேற்பு விழா அவரது டுவிட்டர் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்று கொண்டதை அடுத்து தற்போது துரைமுருகன், பொன்முடி உட்பட அமைச்சர்கள் தற்போது பதவியேற்று வருகின்றனர்.

பதவியேற்பு விழா இன்னும் சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்றும், இதனையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது தாயாரின் வீட்டிற்கு சென்று தாயார் தயாளு அம்மாள் அவர்களிடமும் முதல்வர் ஸ்டாலின் ஆசி பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized8 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
pifteau henri, biolinker.