Connect with us

சினிமா

ரூ.900 கோடி வியாபாரம்.. ரிலீஸுக்கு முன்பே மாஸ் காட்டிய ஆர்.ஆர்.ஆர்.

Published

on

பாகுபலி மற்றும் பாகுபலி2 படத்திற்கு பின் எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள நட்பு பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தமிழில் இப்பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

இப்படம் சுதந்திர போராட்ட காலம் பற்றியது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் பிரபலங்களான அஜய்தேவ்கான், ஆலியாபட் மற்றும் ஹாலிவுட் பிரபலம் ஒலிவியா மோரிஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

rrr

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 3 மாதங்களுக்கு முன்பு உக்ரைன் நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. இயக்குனர் ராஜமவுலி படக்குழுவுடன் கேக் வெட்டி இதை கொண்டாடியுனார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இப்படம் 2022 ஜனவரி மாதம் 7ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் வியாபாரம் ரூ.900 கோடியை தொட்டுள்ளது. தென்னிந்திய மற்றும் வட இந்திய தியேட்டர் வெளியீட்டு உரிமை இரண்டும் சேர்த்து ரூ. 500 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை ரூ.70 கோடி, அனைத்து மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமை ரூ.170 கோடி, சாட்டிலைட் உரிமை ரூ.130 கோடி, இசை வெளியிட்டு உரிமை ரூ.20 கோடி என மொத்தம் ரூ.890 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.

படம் வெளியாகி இன்னும் பல நூறு கோடிகளை வசூலிக்கும் என்பதால் இப்படம் எப்படியும் ரூ. 1200 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?