தொழில்நுட்பம்
பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள் 2026: எடை குறைவு, விலை கம்மி, மைலேஜ் அதிகம்!
Published
1 மணி நேரம் agoon
By
Poovizhi
இன்றைய காலத்தில் பெண்கள் வேலை, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். தினசரி பயணத்தை எளிதாக்க, எடை குறைவாகவும், விலை குறைவாகவும், நல்ல மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் பெண்களுக்கு முக்கிய தேவையாகிவிட்டது.
அந்த வகையில், இந்தியாவில் பெண்களுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள் குறித்து பார்க்கலாம்:
1. Hero Pleasure Plus
பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், வெறும் 104 கிலோ எடையுடன் மிகவும் லைட்வெயிட்டாக உள்ளது. 110cc எஞ்சின் கொண்ட இதில் புளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி ஹெட்லேம்ப் போன்ற அம்சங்கள் உள்ளன. நகரப் போக்குவரத்தில் எளிதாக ஓட்ட முடியும். விலை ரூ.72,000 முதல்.
2. Yamaha Fascino 125 Fi Hybrid
ஸ்டைலான ரெட்ரோ லுக் கொண்ட இந்த ஸ்கூட்டர், 99 கிலோ எடையுடன் இந்தியாவின் மிக லைட்வெயிட்டான மாடல்களில் ஒன்று. ஹைபிரிட் தொழில்நுட்பம், ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்கள் உள்ளன. லிட்டருக்கு சுமார் 55 கிமீ வரை மைலேஜ் தரும். விலை ரூ.81,000.
3. Honda Dio 110
கல்லூரி மாணவிகளுக்கு மிகவும் பிடித்த இந்த ஸ்கூட்டர், மென்மையான ஆக்சிலரேஷன் மற்றும் எளிய ஹேண்ட்லிங் கொண்டது. எக்ஸ்டெர்னல் ஃபியூயல் ஃபில்லிங் வசதி இதன் சிறப்பு. விலை ரூ.75,000 முதல்.
4. TVS Jupiter 110
பெரிய லெக்-ஸ்பேஸ் மற்றும் 21 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. ‘ஈஸி சென்டர் ஸ்டாண்ட்’ தொழில்நுட்பம் பெண்களுக்கு எளிதாக பயன்படுத்த உதவுகிறது. விலை ரூ.86,000.
5. Honda Activa 6G
இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்றான இது, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நீண்ட ஆயுள் கொண்டது. மெட்டல் பாடி, சைலண்ட் ஸ்டார்ட், டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் கொண்டது. விலை ரூ.89,000 முதல்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















