Connect with us

தமிழ்நாடு

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்: அதிரடி அறிவிப்பு!

Published

on

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் ஏற்கனவே போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளன என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சென்னை நகர பெருநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு சில பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மெட்ரோ ரயில் பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்தி, கல்விவாரு தெருவில் தற்போது உள்ள ஒருவழி பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவுக்கு அனுமதிக்கப்படும்.

* லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலையை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, கல்விவாரு தெரு வழியாக முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு மற்றும் பஜார் சாலை வழியாக செல்லலாம்.

* சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, தேவடி தெரு, நடு தெரு மற்றும் ஆர்.கே.மடம் சாலை அல்லது மாதா சர்ச் சாலை வழியாகவும் செல்லலாம்.

* மாநகர பஸ் எண் ’12 பி’ லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் திரும்பி வரும்போது வி.எம்.தெரு வரை வழக்கம்போல் வந்து டி.டி.கே.சாலை வழியாக செல்லலாம்.

* மாநகர பஸ் எண் ’12 எக்ஸ்’ லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ஆர்.கே.மடம் சாலை மற்றும் தெற்கு கால்வாய் கரை சாலை வழியாகவும் திரும்பி வரும்போது மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை வழக்கம்போல் வந்து வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம்.

இவ்வாறு சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்1 மணி நேரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

Translate »
Na wstępie – walne październik 2019. Hk. cəlilabadda novruz bayramı münasibətilə ümumrayon şənliyi keçirilib.