இந்தியா
புல்வாமா தாக்குதல்… உளவுத்துறையின் தோல்வி… வெளியான மூடி மறைத்த அதிர்ச்சி தகவல்!

கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்.

#image_title
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் குறித்து பேசினார். அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல உள்துறை அமைச்சகத்திடம் விமானம் கேட்கப்பட்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் விமானம் தர மறுத்து சாலை வழியாக செல்ல உத்தரவிட்டது.
சாலை வழியாக சென்றபோது வீரர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை. அன்று மாலையே இது குறித்து பிரதமரிடம், இது நம் தவறு விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்தேன். ஆனால் பிரதமர், வெளியில் யாரிடமும் இதனை கூற வேண்டாம், அமைதியாக இருக்கும்படி கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் தீவிரவாதிகள் வந்த வாகனம் 10, 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறை சரியாக கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.