இந்தியா
நான் மண்டியிட தயாராக இல்லை, என் உயிரையும் கொடுக்க தயார்: ரம்ஜான் விழாவில் மம்தா பானர்ஜி ஆவேசம்!

இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையானது இன்று உலகம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார்.

#image_title
அப்போது பேசிய மம்தா, சிலர் பிரிவினையை உண்டாக்க விரும்புகிறார்கள். அவரகளுக்கு நான் கூறுவது, எங்களுக்கு அமைதி வேண்டுமே தவிர வன்முறை தேவையில்லை. நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு இன்று ரம்ஜான் நாளில் நான் உறுதியாக கூறுகிறேன், என் உயிரையும் கொடுக்க தயார், ஆனால் நாட்டை பிளவுபடுத்த விடமாட்டேன்.
அமைதியாக இருக்கங்கள், யார் பேச்சையும் கேட்காதீர்கள். தேசதுரோக கட்சியுடன் நான் போராடுகிறேன். விசாரணை அமைப்புகளுடனும் நான் போராடுகிறேன். எனக்கு தைரியம் உள்ளதால் நான் அவர்களை எதிர்த்து போராடுகிறேன். நான் மண்டியிட தயாராக இல்லை. பாஜகவிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு சிலர் இஸ்லாமிய மக்களின் வாக்குகளை பிரிக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒராண்டு உள்ளது. யார் வெற்றிபெறுவார் யார் தோல்வியடைவார் என்று பார்ப்போம் என்றார்.