Connect with us

விமர்சனம்

கத்தி படத்தின் காப்பியா? – பூமராங் விமர்சனம்!

Published

on

boomerang tamil movie review, boomerang tamil movie, boomerang review, boomerang movie review, boomerang movie tamil review, Boomerang, Reviews, Atharva,R Kannan, Megha Akash, R J Balaji, Boomerang Review in Tamil, பூமராங் திரைப்படம், பூமராங் விமர்சனம், பூமராங் திரை விமர்சனம், அதர்வா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான கத்தி படத்தை பட்டி டிக்கரிங் பார்த்தால் பூமராங் படத்தின் கதை ரெடி, என்பது போலத்தான் படம் இருக்கிறது.

ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்.ஜே. பாலாஜி, சதிஷ், சுஹாசினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பூமராங் படம் இன்று வெளியாகியுள்ளது.

பூமராங் படத்தின் கதையை பார்ப்பதற்கு முன்னர் கத்தி படத்தின் ஒன்லைன் கதையை பார்த்து விடுவோம்..

தண்ணீர் பிரச்சனைக்காக போராடும் ஒருவனுக்கு பதில், திருடன் விஜய் அந்த போராட்டத்தில் ஆள்மாறட்டத்தின் காரணமாக சிக்கிக் கொண்டு, தனது சாதுர்யத்தால், எப்படி அந்த பிரச்சனையை சரி செய்கிறான் என்பது தான் கத்தி படத்தின் கதை.

பூமராங் படத்தில், காட்டுத் தீயில் சிக்கி முகம் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சிவா. அவரது முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதால், முகமாற்று சிகிச்சை செய்ய முடிவு செய்கிறார். மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் சக்தி (அதர்வா)யின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர்.

அந்த முகத்தால், சிவாவுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், சக்தியின் பிளாஷ்பேக்கில் அவர் என்ன செய்தார். எதற்கு மூளை சாவு அடையும் அளவுக்கு போனார் என்பதே மீதிக் கதை.

அதர்வா, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இந்துஜா ஒரு ஐடி நிறுவனத்தில் இருந்து திடீரென கூண்டோடு வெளியேற்றப்படுகின்றனர். பின்னர், அதர்வாவின் கிராமத்தில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்ய நினைக்கின்றனர். ஆனால், அந்த ஊருக்கு தண்ணீர் வர 20கி.மீ., தூரத்தில் உள்ள ஒரு நதியை இணைக்க வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் ஏதும் கிடைக்காததால், இவர் தனது நட்பு படையுடன் களத்தில் இறங்கி நிலங்களை தோண்டி, நதி நீர் இணைப்பை கையில் எடுக்கிறார்.

இதனால், ஆத்திரமடையும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் தான் சிவா உயிர் துறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதை அறியும் சக்தி, சிவாவின் லட்சியத்தை தனது லட்சியமாக மாற்றி அந்த ஊர் விவசாய மக்களுக்காக போராடுகிறார். அதில் அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பது தான் கிளைமேக்ஸ்.

முதல் பாதி மிகவும் இழுவையாக போகிறது. சதிஷ் காமெடி சில இடங்களில் மட்டும் ஆறுதல் தருகிறது. நாயகியாக வரும் மேகா ஆகாஷ், பாடல்களுக்கு மட்டுமே பயன்படுகிறார். பின்னர், தமிழ் சினிமா வழக்கு படி காணாமல் போகிறார்.

ஆர்.ஜே. பாலாஜி, பிளாஷ்பேக்கில் காமெடி செய்யாமல், குணசித்திர வேடத்தில் கலக்கியுள்ளார். இந்துஜாவுக்கும் நடிப்பை வெளிகாட்டும் அளவிற்கான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவரும் அதை சிறப்பாகவே செய்துள்ளார்.

மொத்தத்தில், கத்தி படத்தை அதர்வாவுக்கு ஏற்றார் போல் ஆல்டர் செய்தது போல உள்ளது. ஆனாலும், போர் அடிக்காத திரைக்கதை என்பதால், படம் இடைவேளைக்கு முன்பு சூடு பிடிக்கும் வேகத்துடனே இறுதி வரை செல்கிறது.

இந்த வாரம் வெளிவந்துள்ள சத்ரு, பொட்டு படத்திற்கு இந்த படம் நிச்சயம் உங்களை வெகுவாக ஏமாற்றாது. ஹாலிவுட் மார்வெல் ரசிகராக இருந்தால், கேப்டன் மார்வெல் படத்தை திரையில் சென்று தாராளமாக காணலாம்.

சினி ரேட்டிங்: 2.75/5.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

வணிகம்3 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இந்தியா7 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா7 நாட்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

Translate »
Carlisle to edinburgh airport taxi : your ultimate reliable transport solution | call 01228 812612. medical food manufacturing for global markets. stay ahead in e commerce with amazon movers & shakers.