சினிமா
சாதி பெயரை தூக்கி எறிந்தா யாருக்கு லாபம்.. சம்யுக்தா மேனனை விளாசிய பீஸ்ட் நடிகர்!

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சம்யுக்தா மேனன் தனக்கு ஜாதி பிடிக்காது என்றும் பெயருக்கு பின்னால் உள்ள மேனனை இனிமேல் யாரும் பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தார்.
பாப்கார்ன் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். தமிழில் கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2018ல் வெளியான களரி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

#image_title
எரிடா படத்தில் நடிகர் நாசருக்கு ஜோடியாக நடித்து ஷாக்கை ஏற்படுத்தினார். அப்போதெல்லாம் சம்யுக்தா மேனனாக இருந்த அவர், வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் திடீரென சம்யுக்தா மட்டும் போதும், இனிமேல் மேனன் வேண்டாம் என கூறியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, மலையாளத்தில் சம்யுக்தா நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் உருவாகி உள்ள பூமரங் படத்தில் நடித்துள்ளார். ஆனால், அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு சம்யுக்தா வரவில்லை.

#image_title
தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில், மலையாள சினிமாவை சம்யுக்தா மறந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டுள்ளது. மேலும், பூமரங் பட நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சம்யுக்தா மேனன் ஏன் வரவில்லை என்றும் சமீபத்தில் அவர் மேனன் என்கிற சாதிய அடையாளத்தை தூக்கி எறிந்தது பற்றி உங்கள் கருத்து என்ன எனக் கேட்க, கடுப்பான பீஸ்ட் படத்தில் நடித்த ஷைன் டாம் சாக்கோ, அதனால் என்ன பயன்.. நடித்த படத்தின் ப்ரோமோஷனுக்கே வரமாட்டேங்கிறாரே என தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.







