Connect with us

சினிமா செய்திகள்

ரஜினியை அடுத்து பியர் கிசில்ஸ் உடன் காட்டில் பயணம் செய்யும் பிரபல நடிகர்!

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பியர் கிசில்ஸ் உடன் காட்டில் பயணம் செய்ய பலர் சென்றிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் காட்டில் பியர் கிசில்ஸ் உடன் பயணம் செய்துள்ளார்.

மேன் VS வைல்ட் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை டிஸ்கவரி தொலைக்காட்சியில் பியர் கிசில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார் என்பதும் இந்த நிகழ்ச்சியில் பல தத்ரூபமான காட்சிகள் இடம்பெறும் என்பது தெரிந்ததே.

மனிதனுக்கும் காட்டுக்கும் இடையில் உள்ள புரிதல் என்ன என்பதை தத்ரூபமாக இந்த நிகழ்ச்சி விளக்க இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவர் மத்தியிலும் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை பியர் கிசில்ஸ் தொகுத்து வழங்குகிறார் என்பது அவருடன் பல பிரபலங்கள் காட்டில் பயணம் செய்துள்ளனர் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்பட பலர் அவருடைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதும் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் டப் செய்து ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விதவிதமான விலங்குகள், பறவைகள், பாம்பு வகைகள் ஆகியவற்றுடன் பிரபலங்கள் இணைந்து பயணம் செய்யும் இந்த நிகழ்ச்சி திகிலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் கலந்துகொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Explore buying a franchise in australia business franchise australia.