தமிழ்நாடு
8 ஓட்டு வாங்கியதாக ஊடகங்கள் பொய்ச்செய்தி: பாஜக உமா ஆனந்தன் வெற்றி!

சென்னை மாநகராட்சியில் உள்ள 134 வது வார்டில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் வெறும் ஓட்டுகள் மட்டுமே வாங்கியதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்ட நிலையில் உமா ஆனந்தன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த சிலமணி நேரமாக வெளிவந்து கொண்டு நிலையில் சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டில் போட்டியிட்ட உமா ஆனந்தன் தோல்வி அடைந்தார் என்றும் அவர் வெறும் 8 ஓட்டுகள் மட்டுமே வாங்கியதாகவும் சில ஊடகங்கள் செய்தி பரப்பின.
இதனை உண்மை என்று நம்பிய திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா உள்பட பலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பதும் இது பெரியார் மண் என்றும், இதுதான் தமிழ்நாடு என்றும் பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி பாஜக வேட்பாளர் ஆனந்தன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வெற்றி சான்றிதழையும் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது.
இந்த தொகுதியில் பாஜகவின் உமா ஆனந்தன் 5539 வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகலா 3503 வாக்குகளிம், மூன்றாவது இடத்தை பெற்ற அதிமுக வேட்பாளர் 2695 வாக்குகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



















