Connect with us

சினிமா செய்திகள்

நீ பிரச்சனையை கிளப்பணும்ன்னு முடிவு செஞ்சிட்டியா? பிரியங்காவிடம் காட்டமான இமான்!

Published

on

பிரியங்காவை நீ பிரச்சனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டாயா என இமான் அண்ணாச்சி சற்று காட்டமாக கேட்கும் காட்சி இன்றைய 2-வது புரமோவில் உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சி இருபத்தி எட்டு நாள் முடிவடைந்து இன்று இருபத்தி ஒன்பதாவது நாள் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய புரமோவில் நாமினேஷன் குறித்த காட்சிகள் இல்லை என்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இருப்பினும் இன்றைய முதல் புரோமோவில் அக்ஷரா மற்றும் நிருப் மோதிய காட்சிகள் இருந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரோமோவில் பிரியங்கா மற்றும் இமான் அண்ணாச்சி மோதும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புரோமோவில் நீ எதுக்குடா உள்ள போற அப்படின்னு பேசக்கூடாது இல்ல, எனக்கு பிரியங்கா மீது கொஞ்சம் வருத்தம் என்று இமான் அண்ணாச்சி கூற அப்போது சிபி ’நான் போனேன் தண்டனை அனுபவித்தேன், நீங்கள் வேண்டுமானாலும் போய் கொள்ளுங்கள், தண்டனையை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

அதை நான் வாய்ஸ் அவுட் பண்ணுவதில் என்ன தவறு இருக்கிறது என பிரியங்கா கேட்க, உடனே வருண் சிபியிடம் அதை வாய்ஸ் அவுட் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார். அப்போது இமான் அண்ணாச்சி, ‘நான் தெரியாமல் போய்விட்டேன், அதை ஏன் ரூல்ஸ் பிரேக் என்று எடுக்கிறீர்கள் என்று அப்பாவியாக கேட்க, அதற்கு பிரியங்கா சற்றே கோபமாக ரூல்ஸ் பிரேக் தான் என்று அடித்துக் கூறுகிறார்.

இதனை அடுத்தே பிரியங்காவிடம் நீ பிரச்சனை செய்ய வேண்டும் என்று இருக்கியா எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று சிரித்தபடி கேட்க பிரியங்கா அதற்கு மழுப்பும் காட்சிகள் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பிரியங்கா மீது ரசிகர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது அவரது மதிப்பு மரியாதை குறைந்து வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் அவர் இன்னொரு அர்ச்சனாவாக மாறி விடுவாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?