டிவி
சோம் சோகரின் பிரிய தோழமை மரணம்… பிக்பாஸ் வீட்டுக்குள் தகவல் தெரிவிக்கப்படுமா?

பிக்பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக விளையாடி வருபவர் சோம் சேகர்.
இவரது உற்ற தோழமையாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கூட பிடித்தமானவர்களுக்குக் கடிதம் எழுதச் சொன்ன போது கூட தனது பிரிய நாய்க்காக கடிதம் எழுதி கமல்ஹாசன் முதல் ரசிகர்கள் வரையில் அனைவரது அன்பையும் பாராட்டுகளையும் பெற்றார்.
இவரது நாய் ரோனி தற்போது மரணமடைந்துள்ளது. இதுகுறித்தத் தகவலை சோம் சேகரின் குடும்பத்தார் வெளியிட்டுள்ளனர். இது குறித்த செய்தி சோம் சேகருக்குத் தெரிவிக்கப்படாது என்றும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ரோனியின் மரணம் சோமின் விளையாட்டையும் மனநிலையையும் பாதிக்கும் என்பதால் இத்தகவலை பிக்பாஸ் வீட்டுக்குள் பகிரப்போவது இல்லை என்றே குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram








