Connect with us

வணிகம்

செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் முக்கிய விதி மாற்றங்கள் – மக்களுக்கு தெரிய வேண்டிய தகவல்கள்!

Published

on

செப்டம்பர் 1, 2025 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இவை பொதுமக்களின் நிதி நிலை மற்றும் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

  1. LPG சிலிண்டர் விலை மாற்றம்: ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் LPG விலையில் மாற்றம் நடைபெறும். ஆகஸ்டில் வணிக LPG விலை குறைக்கப்பட்டது. செப்டம்பர் 1 முதல் வீட்டு உபயோக LPG சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

  2. SBI கார்டு விதிமாற்றம்: செப்டம்பர் 1 முதல் சில பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகள் வழங்கப்படாது. மேலும், CPP வாடிக்கையாளர்களுக்கான விதிகள் செப்டம்பர் 16 முதல் மாறுகின்றன.

  3. இந்தியா போஸ்ட் மாற்றம்: பதிவு தபால் (Registered Post) இனி ஸ்பீட் போஸ்ட் சேவையுடன் இணைக்கப்படும். செப்டம்பர் 1 முதல் அனுப்பப்படும் பதிவு தபால்கள் நேரடியாக ஸ்பீட் போஸ்ட்டாக அனுப்பப்படும்.

  4. வருமானவரி தாக்கல் அவகாசம்: 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  5. ஓய்வூதியத் திட்ட மாற்றம்: UPS (Unified Pension Scheme) -க்கு மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் 30க்குள் விண்ணப்பிக்கலாம். ஆனால் இது ஒருமுறை மட்டுமே செய்யக்கூடிய விருப்பம்.

  6. ஜன் தன் கணக்கு re-KYC: வங்கிகள் அனுப்பும் re-KYC அறிவிப்புகளை புறக்கணிக்கக் கூடாது. இல்லையெனில் உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது.

  7. CNG மற்றும் PNG விலை: மாத தொடக்கத்திலேயே இயற்கை எரிவாயு விலைகள் மாற்றப்படலாம். செப்டம்பரில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  8. வெள்ளி நகைகள் ஹால்மார்க்: அரசு செப்டம்பர் 1 முதல் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க்கிங் விதியை அறிமுகப்படுத்தலாம். ஆரம்பத்தில் இது கட்டாயம் அல்ல.

  9. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: செப்டம்பர் 3, 4 தேதிகளில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதன் பிறகு வரி விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

  10. 8வது ஊதியக்குழு: செப்டம்பர் மாதத்தில் 8வது ஊதியக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். பின்னர் ToR பரிந்துரைகளும் இறுதி செய்யப்படும்.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized19 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..