Connect with us

தமிழ்நாடு

பழம்பெரும் அரசியல்வாதியின் 100வது பிறந்த நாள்: இயக்குனர் பாரதிராஜாவின் வாழ்த்து செய்தி!

Published

on

பழம்பெரும் அரசியல்வாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகருமான என் சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்தநாளை அடுத்து பிரபல இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து செய்தி ஒன்று தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாட்டின்‌ சுதந்திரத்திற்காகவும்‌, உழைக்கும்‌ மக்களின்‌ உரிமைக்காகவும்‌ போராடி எட்டு ஆண்டுகள்‌ சிறைவாசம்‌ அனுபவித்து, 80 ஆண்டுகள்‌ மக்கள்‌ பணி செய்து இன்றைக்கும்‌ எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்‌ தோழர்‌ என்‌ சங்கரையா அவர்கள்‌. ஜூலை மாதம்‌ 15 அன்று அவருக்கு 99 வயது முடிந்து நூறாவது பிறந்த நாள்‌. இந்தியாவில்‌ வாழ்ந்து கொண்டிருக்கும்‌ மிகச்‌ சில சுதந்திர போராட்ட வீரர்களில்‌ தோழர்‌ என்‌.சங்கரையாவும்‌ ஒருவர்‌. வெள்ளையர்களின்‌ ஆட்சியை எதிர்த்து, பொது வெளியிலும்‌, சிறையிலிருந்தும்‌, தலைமறைவாகவும்‌ அவர்‌ புரிந்த போராட்டங்கள்‌ பல. மதுரை அமெரிக்கன்‌ கல்லூரியில்‌ இளங்கலை வரலாறு படிக்கும்‌ பொழுது, ஆங்கிலேயர்‌ ஆட்சியை எதிர்த்து தொடர்‌ போராட்டங்களில்‌ கலந்து கொண்டார்‌.”சமூக சீர்திருத்தம்‌ என்பது இந்திய சுதந்திரம்‌ இல்லாமல்‌ முழுமையடையாது” என்று உறுதியாக நம்பினார்‌. இதனால்‌ ஆங்கிலேய அரசை கடுமையாக எதிர்த்தார்‌. 1941 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி 28ஆம்‌ நாள்‌ தோழர்‌ சங்கரையா ஆங்கிலேய அரசு கைது செய்தது. வேலூர்‌ ஜெயில்‌, ஆந்திராவில்‌ உள்ள ராஜமுந்திரி ஜெயில்‌ போன்றவற்றில்‌ அடைக்கப்பட்டவர்‌, பல மாதங்களுக்குப்‌ பிறகு விடுதலையானார்‌. இவரோடு மாணவ இயக்கத்தில்‌ கலந்து கொண்ட பலரும்‌ பட்டப்படிப்பு முடித்தபிறகு முக்கியமான ஆளுமைகளாக அறியப்பட்டனர்‌. ஒருவர்‌ தமிழ்நாட்டின்‌ முதல்வரானார்‌, இன்னொருவர்‌ நீதிபதியானார்‌, அடுத்தவர்‌ ஐஏஎஸ்‌ அதிகாரியாக முதலமைச்சருக்கு தனிச்‌ செயலாளராக பணிபுரிந்தார்‌. தோழர்‌ சங்கரையா மட்டும்‌ தொடர்ந்து சிறைக்கு சென்று கொண்டிருந்தார்‌. காரணம்‌ அவர்‌ பொதுவுடைமைத்‌ தத்துவத்தின்‌ மீது கொண்ட அபாரமான பற்று. இவ்வுலகில்‌ பொதுமக்களிடமிருந்து சுரண்டப்படும்‌ நபர்களுக்கு எதிராகவே இருந்துள்ளார்‌. 60 ஆண்‌டுகளுக்கு முன்‌னரே சாதி மறுப்பு, மத என… என்‌ மறுப்பு திருமணம்‌ செய்த சமூக புரட்சியாளர்‌.

1962 பாவலர்‌ வரதராஜன்‌ அவர்கள்‌ நடத்திய கலைக்குழு ஒன்றுதான்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ கலைக்குழு. அந்தக்‌ காலகட்டத்தில்‌ “கலை இலக்கியப்‌ பெருமன்றம்‌” என்ற ஓர்‌ அமைப்பை ஆரம்பிக்கிறார்கள்‌. கர்மவீரர்‌ காமராஜருக்கு பிறகுமிகப்பெரிய சமுதாய நோக்கம்‌ உள்ள, சுயநலமில்லாத அரசியல்‌ தலைவர்‌ திரு. ஜீவானந்தம்‌. அவருடைய தலைமையில் “கலை இலக்கிய பெருமன்றம்‌” சார்பில்‌ நாடகம்‌ போடுகிறார்கள்‌ அதில்‌ நடிக்க நான்‌ சென்றிருக்கிறேன்‌. நாடகத்திற்கு இசை என்‌ நண்பன்‌ இளையராஜா. அப்பொழுதுதான்‌ மாணவராக இருந்த தா பாண்டியன்‌, சிவகாம சுந்தரி, மாயாண்டி பாரதி, கே டி கே தங்கமணி, தலைவர்‌ *.ராமமூர்த்தி போன்ற தலைவர்களைப்‌ பார்த்து, அவர்களோடு பழகும்‌ வாய்ப்பு எனக்கு நிறைய கிடைத்தது.

முழுக்க முழுக்க சமுதாயத்திற்கு ஆகவே தங்களை அர்ப்பணித்துக்‌ கொண்டவர்கள்‌. பள்ளிப்‌ பருவத்தில்‌ காங்கிரஸ்‌ பேரியக்கத்தின்‌ மீது ஈடுபாடு கொண்டிருந்த நான்‌, இவர்களுடைய சந்திப்புகளால்‌ நானும் ஒரு பொதுவுடமை தோழனாக மாறிப்போனேன்‌. கலைத்துறைக்கு நான்‌ வரவில்லை என்றால்‌ இன்றளவும்‌ பொதுவுடமைக்‌ கட்சியின்‌ தொண்டனாக இருந்து இருப்பேன்‌. மதுரை டவுன்ஹால்‌ ரோட்டில்‌ உள்ள மண்டைய ஆசாரி சந்தில்‌ தான்‌ அப்போது பொதுவுடமை கட்சியின்‌ அலுவலகம்‌ இருந்தது. அந்த அலுவலகத்தை இன்றளவும்‌ என்னால்‌ மறக்க இயலாது. அங்கே தான்‌ முதன்முதலில்‌ தோழர்‌ சங்கரையா வை சந்தித்தேன்‌. அப்போது அவரோடு பழகும்‌ வாய்ப்பு எனக்கு மிகக்‌ குறைந்த அளவே கிட்டியது. நான்‌ கலைத்‌துறைக்கு வந்த பிறகு என்‌ நண்பன்‌ கதாசிரியர்‌ ஆர்‌. செல்வராஜன்‌ சித்தப்பா என்று தெரிந்து கொண்டேன்‌. திரைப்படத்துறை தொழிலாளர்கள்‌ பிரச்சினை ஏற்பட்ட போது அவருடன்‌ நெருங்கிப்‌ பழகும்‌ வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது,அவர்‌ மிக அற்புதமான மனிதர்‌.

ஆடம்பரமும்‌, பதவி ஆசையும்‌, லஞ்சமும்‌, ஊழலும்‌ பரவிக்கிடக்கும்‌ இன்றைய முதலாளித்துவ அரசியல்‌ சூழலில்‌, அப்பளுக்கற்ற பொது வாழ்வோம்‌, மக்கள்‌ சேவையும்‌, மகத்தான தியாகமும்‌ கொண்ட கம்யூனிஸ்ட்‌ தலைவர்‌ தோழர்‌ சங்கரய்யா வின்‌ வாழ்க்கை இன்றைய இளைஞர்கள்‌ அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. தோழர்‌ அவர்கள்‌ நல்ல உடல்‌ ஆரோக்கியத்துடன்‌ நீண்ட காலம்‌ வாழ வேண்டும்‌ என்று விரும்புகிறேன்‌.

இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்19 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
Smooth 60 fps racing experience. Why village mentality matters today. Банкрол у ставках на спорт — це не просто сума грошей, а твій особистий фінансовий щит.