சினிமா செய்திகள்
‘பாரதிராஜா சார் ஒரு லெஜெண்ட்’- நடிகை ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்தது குறித்துப் பகிர்ந்துள்ளார்.
தமிழில் ‘ஜோக்கர்’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். சமீபத்தில் அவர் நடித்திருந்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அவர் மூத்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவை சந்தித்தது குறித்துப் பகிர்ந்துள்ளார்.

Ramya Pandian With Barathiraja
அவர் கூறியிருப்பதாவது, “இந்திய சினிமாவின் பெருமையான பாரதிராஜா சாருடன் பயணம் செய்ய நேர்ந்தது எனக்குப் பெருமையான விஷயம்.
ஒரு குழந்தைக்கு எப்போதும் நிறைய கேள்விகள் இருக்கும். அதற்கு பதில் சொல்வதற்கு பெரியவர்களிடம் எப்போதுமே பதில் இருக்கும்.
பாரதிராஜா சார் எப்போதுமே ஒரு லெஜெண்ட். ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் இருந்தும் உடனடியாக அவர் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளது இந்த கலை மீது அவர் வைத்துள்ள மரியாதையைக் காட்டுகிறது.
சினிமா மீது அவர் வைத்துள்ள காதலும் அன்பும் அவர் மீதான மரியாதையை மேலும் கூட்டுகிறது. மத்திப்புமிக்க உரையாடலாக அமைந்தது.
உங்களின் பல தகவல்களுக்கும் அன்பான ஆசீர்வாதத்திற்கும் நன்றி சார்” என நெகிழ்ச்சியாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்.