வணிகம்
மருத்துவ ஆராய்ச்சிக்கும் உதவிய ‘அவதார்’ டெக்னாலஜி.. ஜேம்ஸ் கேமரூனுக்கு குவியும் பாராட்டுக்கள்!

‘அவதார்’ திரைப்படத்தை பல திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சி செய்துள்ள நிலையில் தற்போது மருத்துவ ஆராய்ச்சிக்கும் ‘அவதார்’ திரைப்படம் உதவி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ‘அவதார்’ திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ‘அவதார்’ படத்தின் மோஷன் கேப்ஷன் என்ற தொழில்நுட்பம் கற்பனையான மனித உருவங்களை திரையில் காட்டப்படும் நடிகர்களின் அசைவுகளை பதிவு செய்ய சென்சார்கள் பொருத்தப்பட்ட உடைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த மோஷன் கேப்ட்சர் என்ற தொழில்நுட்பத்தை தற்போது மருத்துவத்திலும் பயன்படுத்தி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஜேம்ஸ் கேமரூனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது.மருத்துவ துறையில் டுச்சேன் தசைநார் சிதைவு (டிஎம்டி) மற்றும் ஃப்ரீட்ரீச்சின் அட்டாக்ஸியா (எஃப்ஏ) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மீது மோஷன் கேப்சர் சூட்கள் முயற்சிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. லண்டன் இம்பீரியல் கல்லூரி இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாகவும், இந்த ஆராய்ச்சியின் போது, தசைநார் சிதைவு நோயால் பாதிக்கபப்ட்ட நோயாளிகள் மீது மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும், நோயாளிகள் அணிந்த பிரத்யேக உடையின் சென்சார்களிடமிருந்து டேட்டா சேகரிக்கப்பட்டு, AI முறையில் இயங்கும் கருவியில் சேகரிக்கப்பட்டதாகவும், இதனால் சிகிச்சை மிக சுலபமாக இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தோழில்நுட்பம் மூலம் நோய் மிகவும் சரியாக கணிக்கப்பட்டு சிகிச்சையை மேம்படுத்த உதவும் என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகவும் துல்லியமான கணிப்புகள் மிகவும் திறமையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சைகளை மேம்படுத்த உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.