வணிகம்
12,000 போதாது, இன்னும் வேலைநீக்கம் செய்யுங்கள்.. சுந்தர் பிச்சைக்கு ஐடியா கொடுக்கும் கோடீஸ்வரர்!
Published
1 week agoon
By
Shiva
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த 12 ஆயிரம் பேர் சமீபத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த வேலை நீக்க எண்ணிக்கை போதாது, இன்னும் வேலை நீக்கம் செய்யுங்கள் என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர் ஐடியா கொடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் 12000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதாக சுந்தர் பிச்சை அறிவித்தார் என்பதும் இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 6% பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் ஹோன் என்பவர் சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

#image_title
அதில் வேலை நீக்கம் செய்யப்படுவது என்பது எளிதான முடிவு அல்ல என்று தான் ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் அதே நேரத்தில் கூகுளின் தாய் நிறுவமான ஆல்பபெட் லாபத்தை நோக்கி செல்ல வேண்டுமென்றால் பணியாளர்கள் இன்னும் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 6 சதவீத வேலைநீக்க நடவடிக்கை எடுத்த சுந்தர் பிச்சையின் முடிவு பாராட்டத்தக்கது என்றும் ஆனால் இது போதாது என்றும் 20% ஊழியர்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது கணக்குபடி 30 ஆயிரம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது அறிவுரை ஏற்று சுந்தர் பிச்சை இன்னும் 18,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கூகுள் போன்ற பெரிய நிறுவனமே ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வரும் நிலையில் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். எப்போது நமது வேலை காலியாகும் என்ற ஸ்திரத்தன்மை இல்லாமல் அவர்கள் பணிபுரிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What a nice guy
(His net worth is $7.9B) pic.twitter.com/DdudPTQTan
— Peter Yang (@petergyang) January 23, 2023
You may like
-
குழந்தை பிறந்த 3 நாளில் வேலையிழந்த கூகுள் ஊழியர்.. அதிகாலை 2 மணிக்கு வந்த மெயில்..!
-
தொடர்கதையாகும் வேலைநீக்க நடவடிக்கை.. 2000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம்!
-
ஆசைக்கு இணங்காததால் வேலைநீக்கம் செய்யப்பட்டேன்.. கூகுள் பெண் அதிகாரி மீது ஆண் அதிகாரி குற்றச்சாட்டு!
-
ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இதற்கு முடிவே இல்லையா?
-
மெக்டொனால்டு நிறுவனத்தின் இந்த முயற்சி சக்ஸஸ் ஆனால் வேலைநீக்கம் உறுதி.. திடீரென முளைத்த சிக்கல்!
-
செவ்வாய்கிழமை வேலைநீக்கம், வெள்ளிக்கிழமை 50% கூடுதல் சம்பளத்துடன் புது வேலை: அதிர்ஷ்டக்கார பெண்ணின் டுவிட்!