தொழில்நுட்பம்
வினோத போட்டி: ஸ்மார்ட்போன் வேணாம் சொன்ன 72 லட்சம் பரிசு.!

உங்கள் ஸ்மார்ட்போன்னை நீங்கப் பயன்படுத்தலான 72 லட்சம் பரிசு வழங்கப்படும். அட உண்மையா தான் சொல்றோம், உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலான கண்டிப்பா 72 லட்சம் பரிசு வழங்கப்படுமென்று என்று வைட்டமின்வாட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கோக்கோ கோலா நிறுவனத்தின் துணை நிறுவனமான வைட்டமின்வாட்டர் நிறுவனம் இந்தப் போட்டியை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின் படி, போட்டியில் பங்குபெறும் போட்டியாளர் ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை என்றால் 72 லட்சம் பரிசளிக்கப்படும்.
இந்தப் போட்டியில் பங்குபெறும் போட்டியாளருக்கு வைட்டமின்வாட்டர் நிறுவனமே 1996 இல் பயன்படுத்தப்பட்ட பியூச்சர் போன் ஒன்றையும் வழங்குகிறது. உங்களின் அவசர தேவைக்கு அந்தப் போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அலுவலகத்திற்குச் செல்லும் நபர்களும் போட்டியில் பங்குபெறலாம். போட்டியாளர் ஒரு வருடத்திற்கு எந்த ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் மொபைல் போனை மட்டுமே பயன்படுத்த அனுமதி கிடையாது. அலுவலகத்தில் உள்ள லேப்டாப் மற்றும் கணினிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தப் போட்டியில் பங்குபெற உங்கள் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #nophoneforayear மற்றும் #contest என்று ஜனவரி 8, 2019 ற்கு முன் பதிவிடுங்கள். வைட்டமின்வாட்டர் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ளும். போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளருக்கு 1996 இல் பயன்படுத்தப்பட்ட பியூச்சர் போன் வழங்கப்படும். ஒருவருட முடிவில் வெற்றியாளரை நிறுவனம் தேர்வு செய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.












