வீடியோ
சித்தார்த்தின் ’அருவம்’ டீசர் ரிலீஸ்!

நடிகர் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் படமான அருவம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் அருவம் படம் உருவாகி வருகிறது. இதன் டீசரை நடிகர் சித்தார்த்தே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் படமாக இருக்கும் என்று சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தால், ஆனால், படத்தின் போஸ்டர் மற்றும் டீசரின் கடைசி காட்சி, இந்த படம் ஒரு ஹாரர் படம் என்பதை காட்டுகிறது.
அருவம் என்றாலே உருவம் இல்லாத ஒன்று என்று பொருள். அரண்மணை, அவள் படங்களை தொடர்ந்து சித்தார்த் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார்.
மேலும், பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சிவப்பு, மஞ்சள், பச்சை விரைவில் வெளியாக உள்ளது.
இந்த இரு படங்கள் வெற்றியைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் சித்தார்த் காத்திருக்கிறார்.