வீடியோ
ஹவுஸ் ஓனர் டிரைலர் ரிலீஸ்!

சொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
த்ரில்லர் படமா அல்லது ஹாரர் படமா என்ற கன்ஃப்யூசனை அழகாக டிரைலரில் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்.
ஆடுகளம் கிஷோர் லீடு ரோலில் நடித்திருக்கும் இந்த படத்தில் பசங்க படத்தில் சிறுவனாக நடித்து அசத்திய கிஷோர் இளமை கால ஆடுகளம் கிஷோராக நடித்திருப்பது அருமையாக உள்ளது.
அதுக்குள்ள இந்த பையன் இப்படி வளர்ந்துட்டானா என்ற ஆச்சர்யத்தையும் வரவழைக்கின்றது.
ஸ்ரீரஞ்சனி, லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விரைவில் இந்த ஹவுஸ் ஓனர் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.